Collabora Office 22.05 உதவி
சில முக்கிய செயலாற்றிககள், Collabora Office மேத் அளிக்கும் செயல்வல்லமைகள் ஆகியவற்றின் மேலோட்டத்தை இந்தப் பிரிவு கொண்டிருக்கிறது.
Collabora Office மேத் நீங்கள் சூத்திரங்களை உருவாக்க உதவும் சில செய்கருவிகள், செயலாற்றிகள், வடிவூட்டல் உதவியாளர்கள் போன்றவற்றை வழங்குகிறது. இவை யாயும் தெரிவுச் சாளரத்தில் பட்டியலிடப்படுகின்றன, தேவைப்படும் தனிமங்களை நீங்கள் சுட்டெலியைக் கொண்டு சொடுக்கி உங்களின் பணியினுள் இணைக்க முடியும். பூரண மேற்கோள் பட்டியலும் சில மாதிரிகள் உம் உதவியில் உள்ளன.
விளக்கப்படங்களும் படங்களும் போல, சூத்திரங்கள் பொருள்களாக ஓர் ஆவணத்திடையே உருவாக்கப்படுகின்றன. ஓர் ஆவணத்தினுள் ஒரு சூத்திரத்தை நுழைக்கும்போது Collabora Office மேத் தானாகவே தொடங்குகிறது. முன்வரையறுத்த குறியீடுகள், செயலாற்றிகள் ஆகியவற்றின் பெருமளவிலான தெரிவைப் பயன்படுத்தி நீங்கள் சூத்திரத்தை உருவாக்கவும், தொகுக்கவும், வடுவூட்டவும் முடியும்.
நீங்கள் Collabora Office மொழியைத் தெரிந்திருந்தால், நீங்கள் நேரடியாகவும் சூத்திரதை ஆவணத்தினுள் தட்டச்சிடலாம். எ.கா, இந்தச் சூத்திரத்தை உரை ஆவணத்தினுள் தட்டச்சிடுக: "a sup 2 + b sup 2 = c sup 2". இந்த உரையைத் தேர்வதோடு, நுழை -பொருள் - சூத்திரம் ஐத் தேர்ந்தெடுக. உரையானது வடிவூட்டிய சூத்திரத்திற்கு நிலைமாற்றப்படும்.
சூத்திரங்கள் Collabora Office மேத்தில் கணக்கிடப்பட முடியாதவை. ஏனெனில் அது ஒரு சூத்திரத் தொகுப்பி (எழுதுவதற்கும் சூத்திரங்களைக் காட்டுவதற்கும்). அது ஒரு கணக்கீட்டு நிரலி அல்ல. சூத்திரங்களைக் கணக்கிட விரிதாள்களைப் பயன்படுத்துக, அல்லது எளிய கணக்கீடுகளுக்கு உரை ஆவணக் கணக்கீட்டுச் செயலாற்றியைப் பயன்படுத்துக.
சூத்திரங்களை உள்ளிடவும் தொகுக்கவும் Collabora Office மேத் கட்டளைகள் சாளரத்தைப் பயன்படுத்துக. நீங்கள் கட்டளைகள் சாளரத்தில் உள்ளீடுகளைப் போடுகையில், நீங்கள் ஆவணத்தில் முடிவுகளைப் பார்ப்பீர்கள். நீண்ட மற்றும் சிக்கலான சூத்திரங்களை உருவாக்கும்போது மேலோட்டத்தைத் தக்க வைக்க, கருவிகள் பட்டையிலுள்ள சூத்திர இடஞ்சுட்டியை பயன்படுத்துக. இத்தேர்வு இயக்கப்படும்போது, கட்டளைகள் சாளரத்திற்கிடையேயான இடஞ்சுட்டியின் நிலையும் உரைச் சாளரத்தில் காட்டப்படுகிறது.
நீங்கள் மற்ற எழுத்துருக்களிலிருந்து உங்களின் சொந்த குறியீடுகளை உருவாக்கவும் வரியுருக்களை இறக்குமதி செய்யவும் முடியும். நீங்கள் Collabora Office மேத் குறியீடுகளின் அடிப்படை வரிசைப்பட்டியலுக்கு புதிய குறியீடுகளைள் சேர்க்கவோ உங்களின் சொந்த சிறப்பு வரிசைப்பட்டியல்களை உருவாக்கவோ முடியும். சில சிறப்பு வரியுருக்கள் இங்குக் கிடைக்கப்ப்டுகின்றன.
To make working with formulas easier, use the context menus, which can be called up with a right mouse click. This applies especially to the Commands window. This context menu contains all the commands that are found in the Elements pane, and also operators, and so on, which can be inserted into your formula by mouse-click without having to key them into the Commands window.