Collabora Office 21.06 உதவி
தேர்ந்த பிம்பம், அட்டவணை, விளக்கப்படம், சட்டகம் அல்லது வடிவம் ஆகியவற்றிற்கான எண்ணிட்ட படவிளக்கத்தைச் சேர்க்கிறது படவிளக்கத்திற்கு நீங்கள் சேர்க்கவிருக்கும் உருப்படியை வலம் சொடுக்குவதிலும் இந்தக் கட்டளையை அணுகலாம்.
நடப்புத் தெரிவுக்கான படவிளக்கத் தேர்வை அமை.
ஒரு புதுப் பகுப்பை உருவாக்க பகுப்பு படவிளக்கத்தைத் தேர்க அல்லது ஒரு பெயரைத் தட்டச்சிடுக. பகுப்பு உரையானது படவிளக்க எண்ன்னுக்கு முன் படவிளக்க விளக்கச்சீட்டில் தோன்றுகிறது. முன்வரையறுத்த படவிளக்க பகுப்பு ஒவ்வொன்றும் ஒரேபெயரிலான பத்திப் பாணியுடன் வடிவூட்டப்படுகிறது.எ.கா, "விளக்கம்" எனும் படவிளக்கப் பகுப்பு "விளக்கம்" எனும் பத்திப் பாணியுடன் வடிவூட்டப்படுகிறது.
படவிளக்கத்தில் நீங்கள் பயன்படுத்தவிருக்கும் எண்ணிடல் வகையைத் தேர்க.
படவிளக்க எண்ணைத் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் உரையைத் தட்டச்சிடுக.
எண்ணுக்கும் படவிளக்க உரைக்குமிடையே தோன்றுவதற்கான விருப்பத்திற்குரிய உரை வரியுருக்களை உள்ளிடுக.
தேர்ந்த உருப்படியின் மேல் அல்லது கீழ் படவிளக்கத்தைச் சேர்க்கிறது. இந்தத் தேர்வானது சில பொருள்களிக்கு மட்டுமே கிடைக்கும்.
படவிளக்க உரையாடலைத் திறக்கிறது. இது, தேர்வுகள் உரையாடல் பெட்டியிலுள்ள Collabora Office ரைட்டர் - தானி படவிளக்கத்தினால் நீங்கள் பெற்ற உரையாடலைப் போல அதே தகவலைக் கொண்டிருக்கிறது.